திருவாரூர் : மன்னார்குடி அருகே மண்ணுக்குமுண்டான், கர்ணாவூர் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்டன. இதனை மத்திய குழுவும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பின்னர் நிவாரண தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு 2000 ஆயிரம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமணடல் மேலடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வந்த தொடர் மழையில் காரணமாக மண்ணுக்குமுண்டான், கர்ணாவூர், கிளார்வெளி, நொச்சியூர், ஏரிக்கரை கிராமங்களில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாரன நிலையில் இருந்த சுமார் ஆறு ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட சம்பா , தாளடி நெல் பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கி நாசமாகி பயிர்கள் அனைத்தும் முளைக்க தொடங்கியுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
தற்போது மழை சற்று குறைந்துள்ளதால் விவசாயிகள் பயிர்களை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து கிடக்கும் நெற் கதிர்களை காப்பாற்றும் நடவடிக்கைகளிலும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு அரசு அறிவித்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 போதுமானதாக இல்லையென்பதால் மீண்டும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறு கணக்கெடுப்பு நடத்தி அனைத்து விவசாயிகளுக்கும் கூடுதலாக நிவராணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : மழை வெள்ளத்தால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!