திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்து விசலூர் பகுதியில், வெளிமாநில சாராயம் விற்கப்படுவதாக நன்னிலம் காவல் துறைக்கு கிடைத்தத் தகவலின்பேரில், காவல் துறையினர் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமாக செயல்பட்ட மதியழகன்(58), கல்யாணம்(40) ஆகிய இருவரையும் அழைத்து விசாரித்ததில், அவர்கள் ஒரு மூட்டையில் பாக்கெட் சாராயம் வைத்திருந்ததைக் கண்டறிந்தனர்.
இதனையடுத்து மூட்டையில் இருந்த 700க்கும் மேற்பட்ட வெளிமாநில பாக்கெட் சாராயத்தைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: