ETV Bharat / state

பவானி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்! - பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர்: பவானி அணையில் இருந்து காவிரி ஆற்றிற்கு தண்ணீர் திறந்து விடவேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளனர்.

HEAVY RAINING
author img

By

Published : Aug 10, 2019, 12:54 AM IST

இது குறித்து அவர் கூறுகையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகம், கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, அம்மாநில அணைகளில் இருந்து உபரி நீர் மட்டும் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றபடுகிறது. இதனால் ஓரிரு வாரங்களில் மேட்டூர் அணை நிரம்ப கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மேற்குதொடர்ச்சி மலைபகுதிகளில் பெய்து வரும் கனமழையால் பவானி அணை நிரம்பி விட்டது.

முழுகொள்ளவை எட்டியுள்ள பவானி அணையில் இருந்து 60 ஆயிரம் கன அடி தண்ணீரை அமராவதி ஆற்றின் வழியாக காவிரி ஆற்றில் உடனடியாக வெளியேற்ற கூடிய நிலை ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயமாகும்.

செய்தியாளர்களை சந்திக்கும் பி.ஆர்.பாண்டியன்

பொதுப்பணித்துறை சார்பில் ஏரிகள் தூர்வாரும் பணிக்கும், குடிமராமத்து பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை குடிமராமத்து பணிகள் 50 சதவீதம் மட்டும் நிறைவடைந்த நிலையில், மற்ற பணிகள் யாவும் இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே அவற்றை நிறுத்திவிட்டு பவானியில் கிடைக்கின்ற தண்ணீரை அமராவதி, கல்லணை மூலமாக பாசனத்திற்கு தடையின்றி கொண்டு செல்ல பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை, விவசாயிகள் கொண்ட கண்காணிப்புகுழு அமைத்து வறண்டு கிடக்கின்ற நீர்நிலைகளை நிரப்பவேண்டும்.

மேலும் இந்த ஆண்டு சாகுபடிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசு வேளாண் சார்ந்த இடுபொருட்களை தரமானதாக வழங்குவதற்கு முன்வரவேண்டும். இந்தாண்டு சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவேண்டும் என்றார்.

Intro:Body:இந்தாண்டு சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிடவேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின்ஒருங்கினைப்புகுழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கர்நாடகம், கேரளாவில் பெய்து வரும் கடும் மழை பொழிவால் கர்நாடகத்திலிருந்து உபரி நீர் 1 லட்சம் கன அடிக்கு மேல் வெளியேற்றபடுவதால் ஓரிரு வாரங்களில் மேட்டூர் அணை நிரம்ப கூடிய நிலை ஏற்ப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழக மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் பெய்து வரும் கடும் கனமழையால் பவானி அணை நிரம்பி விட்டது. 60 ஆயிரம் கன அடி தண்ணீரை பவானி அணையிலிருந்து அமராவதி மூலமாக காவிரி ஆற்றில் உடனடியாக வெளியேற்ற கூடிய நிலை ஏற்ப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்க கூடியது.

காவிரியில் வெளியேற்ற படும் அமராவதி நீரை கல்லண்ணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு உடனடியாக விடுவிப்பதற்கு போர் கால நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். பொதுப்பணித் துறை தூர் வாரும் பணிகளுக்கும், குடிமராமத்து பணிகளுக்கும் பராமரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளும் இதுவரையிலும் குடிமராமத்து பணிகள் மட்டுமே 50 சதவீதம் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மற்ற பணிகளுக்கான உரிய பணிகளை இதுவரையிலும் துவங்கபடவில்லை. எனவே அதையெல்லாம் நிறுத்தி வைத்து பாசனத்திற்கு தடையின்றி அமராவதி மூலமாக பவானியில் கிடைக்கின்ற தண்ணீரை கல்லணை மூலமாக பாசனத்திற்கு கொண்டு செல்ல பொதுப்பணித்துறை, வருவாய்துறை, காவல்துறை, விவசாயிகள் கொண்ட கண்கானிப்புகுழு அமைத்து வறண்டு கிடக்கின்ற நீர்நிலைகளை நிரப்புவதுதோடு, இந்த ஆண்டு சாகுபடிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு வேளாண்மை சார்ந்த இடுபொருட்களை தரமாக வழங்குவதற்கு முன்வரவேண்டும் . இந்தாண்டு சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிடவேண்டும் என தெரிவித்தார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.