திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தடுத்தல், குப்பைகளை சாலையில் கொட்டுவதை தடுத்தல் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள், மேற்பார்வையாளர்கள் ஒன்று சேர்ந்து பழைய பேருந்து நிலையம் முன்பு மக்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டும் இடத்தை தூய்மைப்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், தூய்மைப்படுத்திய இடத்தில் ஐந்துவகை வண்ணப் பூக்களால் கோலமிட்டு மறுபடியும் குப்பைகளை கொட்டாதவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
குப்பைகளை சுத்தம் செய்தது மட்டுமல்லாமல் அங்கு கோலமிட்ட நகராட்சி தூய்மை இந்தியா பரப்புரையாளர்களை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க:
அரசு மருத்துவமனையில் குவிந்திருக்கும் குப்பை: நோயாளிகள் அவதி!