அறிவியல் சிந்தனையை வளர்த்திடும் நோக்கில் சர் சி.வி.ராமன் ராமன் விளைவு எனும் கண்டறிந்த நாள் தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பான் செக்கர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஒன்றிய குழு பெருந்தலைவர் மனோகரன் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் கணினி, இயற்பியல்,வேதியியல், விலங்கியல் துறை மாணவர்கள் 200க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மன்னார்குடி அரசு கல்லூரி முதல்வர் ரவி மாணவர்களிடையே உரையாற்றினார். அதில், மாணவர்கள் உருவாக்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் அமைய வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: ஆன்மீகத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர் அய்யா வைகுண்டர் -இயக்குநர் பி.சி.அன்பழகன்