திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு மற்றும் அறிவியல் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள் சுமார் 9 ஆண்டுகளாகப் பணியாற்றிவருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது கடந்த அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள பேராசிரியர்களை உறுப்புக் கல்லூரியில் பணி நிரவல் செய்துவருவதால் இங்கு பணியாற்றிவரும் கௌரவ விரிவுரையாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளார்கள். இதனைக் கண்டித்து கௌரவ விரிவுரையாளர்கள் இரண்டாவது நாளாகத் தொடர் ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கல்லூரி நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கௌரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், நாங்கள் இக்கல்லூரியில் பணியாற்றிவரும் சூழ்நிலையில் எங்களை வெளியேற்றப் போகிறீர்கள் எனத் தெரிவிப்பதால் நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'மோடியைக் கொல்ல மனித வெடிகுண்டாக வரத் தயார்' - பரபரப்பை ஏற்படுத்திய வழக்கறிஞர்