தமிழ்நாடு முழுவதும் தைப்பூச விழா இன்று (ஜன.28) பிரசித்திபெற்ற அனைத்து முருகன் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கோயில் கந்தன்குடியில் முருகன் ஆலயத்தில் வள்ளி தேவசேனா முருகப்பெருமான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வீரதமிழர் முன்னணி சார்பில் சிவகாமி கலைக்குழுமத்தினர் ஒருங்கிணைந்து சிலம்பாட்டம் விழா நடைபெற்றது.
இந்த சிலம்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
இதையும் படிங்க: தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோயிலில் திருத்தேரோட்டம்!