ETV Bharat / state

நன்னிலம் மதகு, தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை! - திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருவாரூர் : நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மதகு, தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

nannilam-regulator-farmers-request
nannilam-regulator-farmers-request
author img

By

Published : Jun 6, 2021, 2:48 PM IST

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்கு ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 5.21 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்ததால், விவசாயிகள் விவசாயப் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணிகள் நடைபெற்ற போதிலும் பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்கப்படாததை அடுத்து, தண்ணீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டதால் விவசாயிகள் தவித்து வந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ”கடந்த ஆண்டு குடிமராமத்துப் பணியின்போது நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ரெகுலேட்டர், தடுப்பணைகளை சரி செய்யப்படாமலேயே பணிகளை முடித்து விட்டு சென்றுவிட்டதால் மேட்டூர் நீர் பல்வேறு கிராமப்பகுதிகளில் உள்புக முடியாமல் பல இடங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன.

குறிப்பாக நன்னிலம் ,கொல்லுமாங்குடி, திருமீச்சூர், பழையாறு, பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய ரெகுலேட்டர் தடுப்பணைகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதால் தண்ணீர் செல்லாது” என வேதனை தெரிவித்துள்ளனர்.

தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தடுப்பணைகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:
தமிழ்நாட்டில் மேலும் 26 ஐபிஎஸ் அலுவலர்கள் இடமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.