தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பல்வேறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நன்னிலம் அருகே பூந்தோட்டம் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கிராமத்தில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்த மூங்கில் கூடை பின்னும் தொழிலாளிகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் தங்களுடைய சொந்த செலவில் காவல் துறையினர் உணவு வழங்கினர். மேலும், அவர்களுக்கு முகக்கவசம் வழங்கி கரோனோ தொற்று குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் காவல்துறையினருக்கு கைக்கூப்பி நன்றி தெரிவித்தனர்.