ETV Bharat / state

அரசுக்கு கொடுத்த ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனை முறைக்கேடாக விற்பனை?.. கொந்தளிக்கும் குடியிருப்புவாசிகள்!

கும்பகோணத்தில் அரசுக்கு கொடுத்த ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை முறைக்கேடு கிரயம் செய்த சாசனத்தை ரத்து செய்து, அங்கு சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விபிவி பாக்கியலட்சுமி நகர் நலச்சங்க மேனாள் பொருளாளர் சந்துரு. சர்ச்சைக்குள்ளான காலிமனை
விபிவி பாக்கியலட்சுமி நகர் நலச்சங்க மேனாள் பொருளாளர் சந்துரு. சர்ச்சைக்குள்ளான காலிமனை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 26, 2024, 6:19 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள விபிவி பாக்கியலட்சுமி நகரில், அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை முறைகேடாக கிரய சாசனம் செய்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, கிரய சாசனத்தை ரத்து செய்து அரசே எடுத்துக் கொண்டு நகர் மக்களின் வசதிக்காக அங்கு சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் என்றும், தவறினால் விரைவில் அறவழியிலான போராட்டங்களை முன்னெடுக்கப்படும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - மயிலாடுதுறை முக்கிய சாலையில், தேப்பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 1987ஆம் ஆண்டு விபிவி பாக்கியலட்சுமி நகர் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 127 மனைகள் கொண்ட இந்த நகரில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நகர் உருவாக்கப்பட்ட போது, 14,400 சதுர அடி காலி மனையை எதிர்காலத்தில் இந்நகர் மக்கள் வசதிக்காக, அரசு சமுதாய கூடம் அமைக்க ஏதுவாக முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விபிவி பாக்கியலட்சுமி நகர் நலச்சங்க மேனாள் பொருளாளர் சந்துரு பேட்டி (ETV Bharat Tamil Nadu)

ஆனால் அதே இடம், இந்த நகரினை உருவாக்கிய வி.பி வடிவேல் என்பவராலேயே 1991ஆம் ஆண்டு முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த 14,400 சதுர அடி காலி மனை முழுவதும் முரளி ஆனந்த் நிறுவனத்திற்கு கிரய சாசனம் செய்யப்பட்டுள்ளது. பிறகு 2003ஆம் ஆண்டு இந்த காலிமனையை, தேப்பெருமாநல்லூர் ஊராட்சி நிர்வாகம் தற்போதைய ஊராட்சி மன்ற தலைவர் திமுகவை சேர்ந்த குமரவேலின் தந்தையான கலியமூர்த்தி (காங்) அப்போதைய ஊராட்சி மன்ற தலைவரால், வீட்டுமனை பட்டாக்களாக வகை மாற்றம் செய்த பிறகு, அதனை முரளி ஆனந்த் நிறுவனம் சிலருக்கு விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுகுறித்து இந்த நகர்வாசிகளுக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தான் தெரியவந்துள்ளது. அன்று முதல் தொடர்ந்து அரசிடம் முறைப்படி உரிய ஆவணங்கள், அரசாணைகளுடன் இந்நகர் மக்களுக்கான சமுதாய கூடம் அமைக்க ஒப்படைக்கப்பட்ட 14,400 சதுர அடி இடத்தினை (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.3 கோடி) மீண்டும் அரசு கையப்படுத்திட தஞ்சை மாவட்ட ஆட்சியர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல அரசு உயர் அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இதுவரை விடிவு ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. தற்போது அந்த காலிமனையை கிரயத்திற்கு வாங்கிய நபர்கள் அந்த இடத்தில் அளவீடு செய்து கருங்கல் நிறுவ வந்த போது, அவர்கள் இந்நகர் குடியிருப்பு வாசிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. அதனை தொடர்ந்து இந்த பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பெண் குழந்தைகளை நேசிப்பது சமூகத்தை நேசிப்பது போன்றது" - அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக வழங்கிய ஆயி பூரணம் அம்மாள் நெகிழ்ச்சி!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விபிவி பாக்கியலட்சுமி நகர் நலச்சங்க மேனாள் பொருளாளர் சந்துரு, "அரசிடம் முறைப்படி நகர்வாழ் மக்களின் வசதிக்காக, சமுதாயக் கூடம் அமைக்க வழங்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான காலிமனையை, தனி நபர்கள் சுய லாபத்திற்காக, இதனை முறைகேடாக வகை மாற்றம் செய்து, கிரய சாசனம் செய்து அரசையும், இந்நகர் மக்களையும் ஏமாற்றி மோசடி செய்துள்ளனர்.

எனவே இந்த கிரய சாசனத்தை ரத்து செய்து அரசு இந்த இடத்தினை கைப்பற்ற வேண்டும் எனவும், அந்த இடத்தில் தங்களுக்கு சமுதாய கூடத்தை அமைத்து தர வேண்டும் என்றும், தவறினால் விரைவில் இந்நகர் மக்களை ஒன்று திரட்டி அறவழிபோராட்டங்களில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும்" தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.