சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியனின் நினைவாக சென்னையில் அவரது வீடு அமைந்துள்ள காம்தார் நகர் சாலைக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை என பெயர் சூட்டப்பட்டு வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பதிவில், '' இந்திய திரையுலகின் ஆற்றல்மிகு அடையாளம். 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய ‘பாடும் நிலா’.
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரின் பெயரை, அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் - ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்திய திரையுலகின் ஆற்றல்மிகு அடையாளம். 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடிய ‘பாடும் நிலா’.
— Udhay (@Udhaystalin) February 11, 2025
மறைந்த பின்னணி பாடகர் திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரின் பெயரை, அவர் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு சூட்ட வேண்டும் என்று அவருடைய குடும்பத்தார் -… pic.twitter.com/Ucgl9tG2Fm
அதனை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காம்தார் நகர் முதன்மை சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என்று பெயர் சூட்ட உத்தரவிட்டார்.
அதற்கான அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை'க்கான வழிகாட்டி பலகையை இன்று நுங்கம்பாக்கத்தில் திறந்து வைத்தோம். எஸ்.பி.பி.சாரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, அவரின் குடும்பத்தாருக்கு நினைவுப் பரிசினை வழங்கினோம்.
காற்றில் கானமாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவரது புகழ் ஓங்கட்டும்!'' என இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.