ETV Bharat / state

நன்னிலத்தில் காணாமல் போன பாசன வாய்க்கால்கள்: தூர்வார விவசாயிகள் கோரிக்கை - The demand of the farmers of Oral Durbar

திருவாரூர்: நன்னிலத்தில் காணாமல் போன பாசன வாய்க்கால்களை கண்டுபிடித்து போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

thiruvarur
thiruvarur
author img

By

Published : Oct 30, 2020, 8:59 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சம்பா தாளடி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், மூலமங்கலம், பனங்குடி, தூத்துக்குடி ,உள்ளிட்ட பகுதிகளுக்கு புத்தாற்றிலிருந்து பிரிந்து வரும் ராஜேந்திர பீ சேனல் கிளை வாய்க்கால் பாசனத்தை நம்பி ஐநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.

இந்த மூலமங்கல வாய்க்காலிருந்து பிரியும் ராஜேந்திர பி சேனல் வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாததால் தற்போது வாய்க்கால் இருந்த தடயமே இல்லாமல் மாயமானது.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறுகையில், மூலமங்கல வாய்க்காலின் கிளை வாய்க்காலான ராஜேந்திர வாய்க்கால் மூலமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் தண்ணீரை நம்பி சாகுபடி செய்து வந்தோம். தற்போது அந்த இடத்தில் தனியார் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் வீட்டுமனை பட்டாக்களாக மாற்றிவிட்டனர்.

நன்னிலம் அரசு கலைக்கல்லூரி கட்டப்பட்டதால் பாசன வாய்க்கால்கள் இருந்த தடையம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. இதனால், இந்த பகுதி விவசாயிகள் சம்பா தாளடி செய்த பயிர்களுக்கு போர்வெல் நீருக்கு ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் செலவழித்து சாகுபடி செய்யும் அவல நிலை தொடர்கிறது.

நன்னிலத்தில் காணாமல் போன பாசன வாய்க்கால்கள்

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முலமங்கல பாசன வாய்க்காலை போர்க்கால அடிப்படையில் முழுமையாக தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் தண்ணீர் பிரச்னை: எப்போது தீரும்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.