திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேவுள்ள பேரளம் கடைத்தெருவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கீ.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தின்போது “புரெவி, நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு தமிழ்நாடு அரசு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கிய நிதி போதாது, மறு கணக்கெடுப்பு நடத்தி ஏக்கர் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் 100 விழுக்காடு நிவாரணம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: தொடர் மழையால் இழப்பு - நிவாரணம் வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!