திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பருத்தியில் மாவு பூச்சி நோய் தாக்குதல் அதிகம் இருப்பதால் இலைகள் முழுவதும் பழுப்பு நிறத்தில் காணப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " தற்போது கோடை பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக நன்னிலம், முகந்தனூர் ,மாத்தூர் ,அன்னதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாவுப் பூச்சி நோய் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் பருத்தியில் இலைகள் முழுவதும் கொட்டத் தொடங்கி, நிறங்கள் முழுவதுமாக மாறத் தொடங்கியுள்ளது.
தற்போது பருத்தி எடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நோய் தாக்குதல் காரணமாக மகசூல் பாதிக்கப்படுகிறது. வேளாண் துறை அலுவலர்கள் வராததால் குழப்பத்தில் உள்ளோம்.
இதையும் படிங்க:
ஏரியை ஆக்கிரமித்த கட்டடங்கள் இடிப்பு: ரூ.8.40 கோடி நிலங்கள் மீட்பு!