திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணியினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்து தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
நேரடி நெல் விதைப்பு பணிகள் ஆய்வு
அதனைத் தொடர்ந்து, கொல்லுமாங்குடியில் செம்மை நெல் சாகுபடி நாற்றங்காலை பார்வையிட்டு சாகுபடி பற்றி கேட்டிருந்த பின்னர், அருகிலுள்ள சிறுவலூர் கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன், பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.