ETV Bharat / state

சிஏஏவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சவப்பெட்டிக்குள் அடைத்து நூதன போராட்டம்

திருவாரூர்: குடியுரிமை திருத்தச் சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூதன முறையில் இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

author img

By

Published : Feb 24, 2020, 11:05 AM IST

protest
protest

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 8ஆவது நாளாக 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏவிற்கு எதிராகப் போராடிய இஸ்லாமியர்கள் மீது, தாக்குதல் நடத்திய தமிழ்நாடு காவல்துறையைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் 500க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதில் இஸ்லாமிய பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

8ஆவது நாளாக நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்

இதனிடையே போராட்டத்தின்போது சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என வாசகங்கள் எழுதப்பட்ட துணிகளை அடுக்கி, அதனை இறந்தவர்போல பாவித்து, சவப்பெட்டியில் வைத்து நூதன முறையில் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

தமிழ்நாடு அரசு சிஏஏவிற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'மண்ணின் அடிப்படையிலே குடியுரிமை வழங்க வேண்டும்' - ப. சிதம்பரம் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.