திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு சரியான ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்ற புகார் பல நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று திடீரென்று ஒப்பந்த ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "எங்களுக்கு நிர்வாகம், வார விடுமுறை அளிப்பதில்லை எனவும் வார விடுமுறை எடுக்கும்பட்சத்தில் அதை பணிக்கு வரவில்லை என கருதுகிறார்கள். ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்றனர்.
இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் எங்கள் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் எச்சரித்தனர்.
இதையும் படிங்க: மறைமுக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, திமுக இடையே மோதல் - டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு