திருத்துறைப்பூண்டி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன் தனது வயலில் விளைந்த 336 நெல் மூட்டைகளை திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சில நாள்களுக்கு முன்பு கொண்டுசென்றுள்ளார். அங்குள்ள ஊழியர்கள் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக காரணம்காட்டி நெல் மூட்டைகளை எடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இதையடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில் வெளியூர் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், சட்டப்பேரவை உறுப்பினர் தன்னையே அலைகழித்தால் சாதாரண விவசாயிகள் என்ன செய்வார்கள் எனக் கூறிய அவர், இதனைக் கண்டித்து தனது நெல் மூட்டைகளுடன் தன்னையும் கொளுத்திக்கொள்ளப் போவதாக டீசல் கேனோடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவம் இடத்திற்கு திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் ஜெகதீசன், காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் ஆடலரசன் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து சென்றார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்து... தூக்கி வீசப்பட்ட இருசக்கரவாகன ஓட்டி... வெளியானது சிசிடிவி