திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள சேங்காலிபுரத்தில் அம்மா மினி கிளினிக்கை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தெரியாமல் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசத் தெரியாமல் பேசுகிறார்.
புயல்கள் தடுப்பு நடவடிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டார். விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரம் உள்ளிட்டவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும்" என்றார். இந்நிகழ்வின்போது அமைச்சர் காமராஜ் உடன் மாவட்ட ஆட்சியர் சாந்தா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கோவில்பட்டியில் அம்மா மினி கிளினிக் தொடக்கம்!