மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உணவுத் துறை அமைச்சர் காமராஜ், ”டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மக்களுக்கு நல்லது எதுவும் நடக்கக்கூடாது என்பதுதான் அக்கட்சியின் நோக்கம்.
அதற்கான தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றும்போது, திமுக வெளிநடப்பு செய்தது. அது தமிழ்நாடு விவசாயிகளுக்கு திமுக செய்த துரோகம். திமுக கட்சியை ஸ்டாலின் நடத்தவில்லை; திமுகவின் அரசியல் ஆலோசகராக உள்ள பிரசாந்த் கிஷோர் தான் அக்கட்சியை நடத்துகிறார். பெரியார் வழி என்று கூறிக்கொள்ளும் திமுக, பிரசாந்த் கிஷோரை நம்பி கட்சியை நடத்தும் அளவிற்கு தரம் தாழ்ந்துவிட்டது.
அந்த வகையில் திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக உள்ளது. எனவே அதிமுகவை எத்தனை கிஷோர் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது. மூன்றாவது முறையாகவும் மக்கள் துணையோடு மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: பிரசாந்த் கிஷோரை நியமித்ததில் தவறில்லை: கி. வீரமணி