ETV Bharat / state

அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்: அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என, அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Minister Kamaraj
author img

By

Published : Sep 28, 2019, 7:23 PM IST

திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியில் முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்ட மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மக்கள் பயன் பெறுவதற்காக விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அனைவரும் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு அறிகுறிகள் இருப்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, தாய் மொழியை கற்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை, தமிழுக்கான முன்னுரிமையை முதலிடம் வழங்குவதில் தமிழ்நாடு அரசும், அதிமுகவும் உறுதியாக உள்ளது.

மேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்களது கூட்டணி வலுவாக உள்ளதால், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

Intro:

Body:அதிமுக பாஜக கூட்டணி வலுவாக உள்ளதால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அதிக வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெறுவார்கள் என அமைச்சர் காமராஜ் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் பகுதியில் தனியார் மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பிட்டுத் திட்ட மருத்துவ முகாமை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது,
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தில் மக்கள் பயன் பெறுவதற்காக விழிப்புணர்வுகள் செய்யப்பட்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு அறிகுறிகள் இருப்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்.

வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை அதனை எதிர்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள் கையிருப்பில் உள்ளது. பள்ளமான குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாய் மொழியை கற்க வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை, தமிழுக்கான முன்னுரிமையை முதலிடம் வழங்குவதில் தமிழக அரசும், அதிமுக-வும் உறுதியாக உள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எங்களது கூட்டணி வலுவாக உள்ள காரணத்தினால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்கு எண்ணிக்கை வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.