திருவாரூர் : மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் ’போதைப்பொருட்கள் ஒழிப்பு’ உறுதிமொழி ஏற்கப்பட்டது.
அதில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, நிக்கோட்டின் சேர்க்கப்பட்ட பொருள்களான குட்கா, பான் மசாலா உள்ளிட்ட எந்த சுவைக்கும் பொருட்களையும் தயாரிக்கவோ, வாகனங்களில் எடுத்துசெல்லவோ, விநியோகிக்கவோ, சேமிக்கவோ மற்றும் விற்பனை செய்யவோ மாட்டோம் என வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
புகையிலை பயன்படுத்தாதீங்க...
இதைத் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்,"தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான் மசாலா, குட்கா, போன்ற புகையிலை பொருட்களை வைத்திருப்பதும், விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உபயோகிக்கப்படுத்தும்போது வாய்புண், புற்றுநோய் போன்ற உடல் பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியாக உயிரிழப்பு ஏற்படுகிறது.
புகையிலை பொருட்களை சேமித்து வைத்திருப்பது, விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்படும்" என்றார்.
மாவட்டத்தில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்வது தெரியவந்தால் 9444042322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: தரகர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு... லேப்டாப்கள், ஆவணங்கள் பறிமுதல்!