ETV Bharat / state

100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய திமுக எம்எல்ஏ! - திருவாரூரில் 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ ராஜா

திருவாரூர்: ஊரடங்கு உத்தரவால் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த 100 குடும்பங்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

நிவாரணப் பொருள்கள் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

author img

By

Published : Apr 29, 2020, 7:34 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், அனைத்து சேவை சங்கங்கள், பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து, மன்னார்குடியில் செயல்படும் நேசக்கரம் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கணவனால் கைவிடப்பட்டு, தனது குடும்பத்தை நடத்திவரும் பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளை வைத்துக்கொண்டு பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் குடும்பத்தினர் உள்ளிட்ட 100 குடும்பங்களுக்கு 15 நாள்களுக்குத் தேவையான மளிகைப் பொருள், அரிசி, ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

நிவாரணப் பொருள்கள் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்

இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஊராட்சி தலைவர் பாலு ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் , ரோட்டரி சங்க துணை ஆளுநர் செந்தில்குமார், மன்னார்குடியில் லயன்ஸ் சங்க தலைவர் சந்தோஷ். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் வானிலை செல்வகுமார், ஆர்.வி.ஆனந்த் உளிளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 'கரோனா இல்லாத மாவட்டமாக மாறிய ஈரோடு' - செங்கோட்டையன் பெருமிதம்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.