திருவாரூர்: மன்னார்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த (ஆக.2) ஆம் தேதி பணியை முடித்துவிட்டு மன்னார்குடியில் இருந்து பேருந்து மூலம் சீர்காழி பேருந்து நிலையத்தில் வந்திறங்கி உள்ளார்.
அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்று கடுமையாக தாக்கி வலது கால் மற்றும் தொடையில் கத்தியால் குத்தியுள்ளனர்.
விசாரணை
பின்னர் அன்று இரவு எட்டு மணி அளவில் சவளக்காரன் பகுதியில் யாரும் இல்லாத இடத்தில் தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் இதைக் கண்டு ராஜேந்திரனை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மன்னார்குடி தாலுகா காவல் துறையினர் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துப் பிரச்சினை காரணமாக தாக்கப்பட்டாரா அல்லது முன் விரோதம் காரணமாக தாக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் நிலத்தகராறில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு