தமிழ்நாடு முழுவதும் புரெவி புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள மணலி கிராமத்தில் 50க்கும் மேற்ப்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் நேற்றிரவு (டிச.04) முழுவதும் பெய்த தொடர் கனமழையால் குளங்களில் மழை நீர் நிரம்பி கிராம பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மணலி கிராமத்திற்கு அருகிலுள்ள குருங்குளத்தில் ஓடக்கூடிய கூத்தாற்று நீரும், மணலி கிராமத்திற்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மணலி கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, முகாம்களுக்கு அழைத்து செல்லவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 22.47 செ.மீட்டர் மழைப்பதிவு!