ETV Bharat / state

17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி ஓட்டுநர் கைது - லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது

நன்னிலம் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த லாரி ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்.

sexual harassment  lorry driver arrested in pocso  nannilam lorry driver arrested in pocso  sexual harassment to child  சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு  லாரி ஓட்டுநர் போக்சோவில் கைது  திருவாரூரில் சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு
பாலியல் வன்புணர்வு
author img

By

Published : Mar 12, 2022, 1:18 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த 41 வயது லாரி ஓட்டுநர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் செல்போன் மூலம் நட்பாக பேசி வந்தார். ஒருகட்டத்தில் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, வேளாங்கண்ணியில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, சிறுமியிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைகண்ட அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி ஓட்டுநர் மீது புகார் அலித்தார். அதனடிப்படையில் லாரி ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: நடிகையை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த ஆசாமிகள் - அதிரடியாக கைதுசெய்த காவல் துறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.