திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடமேலையூர் கண்டியன் தெரு ஊராட்சியில் மொத்தம் 1500 வாக்குகள் உள்ளன. ஊராட்சி மன்ற பதவிக்கு நான்குக்கும் மேற்பட்ட பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவதாக இருந்த நிலையில், அந்த ஊராட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசி ஊராட்சிக்கு பொது நிதிக்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ஏலம் விட முடிவு செய்தனர்.
இந்நிலையில் கொம்பன் பட பாணியில் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஊர் கோயிலில் வைத்து ஏலம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நான்கு பெண் வேட்பாளர்களின் கணவர்கள் பங்கேற்றனர். பதவிக்கான ஏலம் இரண்டு லட்சம் ரூபாயில் தொடங்கி 15 லட்சம் ரூபாயில் முடிவடைந்தது.
இதையும் படிங்க:
வார்டு வரையறையில் குளறுபடி - மறுவரையறைக்குப் பின் தேர்தலை நடத்த மனு!