திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலங்குடியில் ஞானபுரீ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. தற்போது இக்கோயிலானது சோழர் கால பாணியில் கை தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு மறுசீரமைக்கப்பட்டது. இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜனவரி 31ஆம் தேதியன்று சுவாமிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 12ஆம் கால யாக சாலை பூஜைகள், பூர்ணாகுதி மற்றும் மஹா தீபாராதனை காட்டப்பட்டது. யாகசாலை பூஜைகளை தினகர் சர்மா தலைமையிலான பட்டாச்சாரியார்கள் நடத்திவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து கோயிலின் கோபுரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை ஸ்தாபகர் ரமணி அண்ணா நடத்திவைத்தார். கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி திரிசனம் செய்தனர். நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமாறன் தலைமையில் 250க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மாசாணியம்மன் கோயில் நள்ளிரவு மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!