ETV Bharat / state

குடிமராமத்துப் பணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர் - குடிமராமத்து பணியை தொடங்கி வைத்த உணவுத்துறை அமைச்சர்

திருவாரூர்: ஆணைக்குப்பம் கிராமத்தில் தடுப்பணை புதுப்பிக்கும் குடிமராமத்துப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

உணவுத்துறை அமைச்சர்
உணவுத்துறை அமைச்சர்
author img

By

Published : May 14, 2020, 11:33 PM IST

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள ஆணைக்குப்பம் கிராமத்தில் தடுப்பணை புதுப்பிக்கும் குடிமராமத்துப் பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், 'தமிழ்நாட்டில் விவசாயிகளுக்குப் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் விவசாயிகளின் உரிமைக்காக குரல் கொடுத்து, அதற்கான உரிய நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்து வருகிறார். ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த நிலையில், காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, விவசாயிகளின் வயிற்றில் பால் வார்த்தார்.

மேட்டூர் அணையில் 100 அடி தொடர்ந்து இருந்த வரலாறு என்பது இதுவரை இல்லை. இந்த ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சியில் 100 அடி தண்ணீர் உள்ளது. விரைவில் இப்பகுதி விவசாயிகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூர் அணை திறப்பு, குறித்த செய்தியை முதலமைச்சர் வெளியிடுவார் என்பதை விவசாயிகளுடன் சேர்ந்து நானும், எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடு முழுவதும் ரூ.499.8 கோடி மதிப்பீட்டில் 1387 குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறுவை சாகுபடிக்குத் தேவையான இடுபொருட்கள், விதை நெல் உள்ளிட்ட அனைத்தும் தயார் நிலையில் உள்ளன' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள்: காணொலி வாயிலாக தொடக்கி வைத்த திருமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.