திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 405 பயனாளிகளுக்கு ரூ. 52 லட்சத்து 64 ஆயிரத்து 788 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் தெரிவித்ததாவது, 'தேர்தலை கண்டு பயப்படுகிற இயக்கம் அதிமுக இயக்கம் கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக தொண்டர்களுக்கு நிகராக தொண்டர் பலம் கொண்ட இயக்கம் வேறு எதுவும் இல்லை' என்றார்.
எனவே, 'எங்களை கண்டு வேறு இயக்கங்கள் பயப்படலாமே தவிர, எங்களுக்கு ஒரு போதும் தேர்தலை கண்டு பயம் கிடையாது' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்புவார்' - திண்டுக்கல் லியோனி