புதுடெல்லி: இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு ) சட்டம் 2019-ன்கீழ் தடை செய்யப்பட்ட முத்தலாக் நடைமுறைக்கு எதிராக எத்தனை இஸ்லாமிய ஆண்களுக்கு எதிராக முதல் தகவல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தரவுகளை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ஆஜரான மத்திய அரசின் வழக்கின் வழக்கறிஞர் துஷார் மேத்தா, "இந்த சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் தேவையைக் கொண்டுள்ளது. எனவே அந்த சட்டம் முழுமை பெற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்,"என்றார்.
எத்தனை வழக்குகள் தாக்கல்?
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, "தலாக் என்று மூன்று முறை சொல்லப்படுவதற்கு எதிராக இந்த சட்டம் அபராதம் விதிக்கும் வகையில் உள்ளது. முதல் தகவல் அறிக்கைகள் மையப்படுத்தப்பட்டுள்ளன. முத்தலாக்குக்கு எதிராக எத்தனை வழக்குகள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை தெரிவியுங்கள். உயர் நீதிமன்றங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டு்ள்ளா?,"என்றும் கேள்வி எழுப்பினார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாட்ஷா, "வெறுமனே மூன்று முறை தலாக் சொல்வதற்கு எதிராக இப்போது அபராதம் விதிக்கப்படுகின்றது,"என்று கூறினார். இன்னொரு மனதுரார் சார்பில் ஆஜரான எம் ஆர் சாம்சத், "இது போன்று தலாக் சொல்வது, உணர்ச்சிகரமான வன்முறை குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வருகிறது,"என்றார். அப்போது அரசு தரப்பில் வாதிட்ட துஷார் மேத்தா, "இது போன்று தலாக் சொல்பவர்கள், மூன்று முறை சொன்ன உடன், நீ என்னுடைய மனைவி அல்ல என சொல்வதுடன் அதுவரை மனைவியாக இருந்த ஒருவர் வீட்டில் இருந்து, ஆணின் வாழ்க்கையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்,"என்றார்.
குடும்ப வன்முறை சட்டத்தில் வராது: தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் இது வரும் என்று நான் கருதவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். கிராமப்புற பகுதிகள் உட்பட நாடு முழுவதும் முத்தலாக் சட்டத்துக்கு எதிராக எத்தனை எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை மத்திய அரசின் வழக்கறிஞர் அளிக்க வேண்டும். எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள விரும்புகிறது," என்றார்.
வழக்கறிஞர் நிஜாம் பாட்ஷா,"தனித்து விடப்படுதல் என்பது எந்த ஒரு சமூகத்திலும் ஒரு குற்றமாக கருதப்படுவதில்லை,"என்றார். அப்போது வாதிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, "முத்தலாக் என்ற முறை எந்த ஒரு சமூகத்திலும் இல்லை,"என்றார். இன்னொரு வழக்கறிஞர் சாம்சத், "இது கிரிமினல் குற்றம். தாக்குதல் உள்ளிட்ட தீவிரமான விவகாரங்களில் கூட திருமணம் தொடர்பான வழக்குகளில் டெல்லியில் கூட இதுபோன்ற எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் மூன்று முறை தலாக் என்று சொன்னால், அந்த நபர் சிறைக்கு போக நேரிடும் என்று இங்கு சொல்லப்படுகிறது. இதுதான் இப்போது விவகாரமாக இருக்கிறது," என்றார்.
முத்தலாக் குற்றமாக கருதப்பட வேண்டும்: "முத்தலாக் என்பது சரியான நடைமுறை என்று பெரும்பாலான வழக்கறிஞர்கள் வாதிடுவதில்லை. அது ஒரு குற்றமாக இருக்க வேண்டும் என்ற அம்சத்தில் தான் பெரும்பாலும் வாதிடுவதாக இருக்கலாம்,"என தலைமை நீதிபதி கூறினார். மனுதாரரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "முத்தலாக் நடைமுறை இருக்கக் கூடாது,"என்றார்.
2019-ம் ஆண்டின் சட்டத்துக்கு எதிராக பல அமைப்புகள் வழக்குத் தொடுத்திருப்பதை அடுத்து அனைத்து மனுதாரர்களின் பெயர்களை நீக்கி விட்டு, இந்த வழக்கை 2019ஆம் ஆண்டின் இஸ்லாமிய பெண்கள்(பெண்களின் திருமண உரிமை) திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்த விசாரணை மார்ச் 17ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.