ETV Bharat / state

பிவிசி பைப் சிக்கி காட்டெருமை காலில் ஏற்பட்ட காயம்! மீட்ட வனத்துறையினர்! - WILD BUFFALO PIPE STUCK

நீலகிரி மாவட்டம் கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒசட்டி பகுதியில் காலில் பிவிசி குழாயுடன் சுற்றித் திரிந்த காட்டு எருமைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அதனை அகற்றினர்.

காட்டெருமை  காலில் சிக்கிய பிவிசி பைப்பை அகற்றும் வனத்துறையினர்
காட்டெருமை காலில் சிக்கிய பிவிசி பைப்பை அகற்றும் வனத்துறையினர் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 2:58 PM IST

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ரேலியா அணை மற்றும் ஒசட்டி பகுதியில் காட்டெருமை ஒன்று காலில் பிவிசி (PVC) குழாய் சிக்கியவாறு சுற்றித் திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் உத்தரவின்படி கட்டப்பட்டு வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் வனத்துறை தனிக் குழு அமைத்து காட்டருமையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறை கால்நடை மருத்துவர் குழு மற்றும் வனத்துறையினர் காட்டெருமையை கண்காணித்து வந்த நிலையில் இன்று (ஜன.29) அந்த காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, அதன் காலில் சிக்கியிருந்த PVC குழாயினை வனத்துறை தனிக் குழு நீக்கினர். பின் காட்டெருமையை மீண்டும் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

காட்டெருமை காலில் சிக்கிய பிவிசி பைப் அகற்றம் (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: கிராம மக்களை காக்க களமிறங்கிய கும்கி யானை முத்து.. நிம்மதியில் பெருமூச்சு விட்ட மக்கள்!

காட்டெருமையை காலில் பிவிசி குழாய்கள் எப்படி சிக்கியிருக்கும் என ஆய்வு செய்ததில், குன்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிட வேலைக்காக பிவிசி குழாய்கள் பயன்படுத்தப்படும் நிலையில் அங்கு கட்டடங்களின் தேவைகள் போக மீதம் உள்ள குழய் குப்பைகளை அப்புறப்படுத்தாமல், வனப்பகுதியில் வீசிச் செல்வதால் அதில் விலங்குகள் சிக்கி ஆபத்தான வகையில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதனால் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.