ETV Bharat / state

புனேவை அச்சுறுத்தும் GBS நோய்: "தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - MA SUBRAMANIAN

மகாராஷ்டிராவில் புனே பகுதியை அச்சுறுத்தி வரும் ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 3:06 PM IST

சென்னை: மகாராஷ்டிராவில் இருக்கக் கூடிய ஜிபிஎஸ் நோய் (Guillain Barre Syndrome disease) பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் ரூ.362.87 கோடி மதிப்பீட்டில் மக்கள் பயன்பாட்டிற்காகக் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் நிதி உதவியுடன் ரூ.200.06 கோடி மதிப்பீட்டில் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. மேலும், ரூ.162 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் பொருத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட காட்சி
அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட காட்சி (ETV Bharat Tamil Nadu)

அனைத்து கட்டடங்களும் விரைவில் திறப்பு:

தரைதளத்துடன் கூடிய ஆறு தளங்களும், 468 படுக்கை வசதிகளும் கொண்ட இந்த கட்டடத்தில், 200 தீவிர சிகிச்சை படுக்கை வசதிகளும், 16 அறுவை அரங்கங்களும், ஒருங்கிணைந்த தீவிர மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு பயன்பாட்டிற்கு வருகிறது.

சிறுநீரகவியல், மயக்கவியல், நரம்பியல், இருதயவியல், இரைப்பை மற்றும் குடல் நோய் துறை போன்ற பல்வேறு துறைகள் படிப்படியாக இடமாற்றம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது. திமுக அரசு பதவி ஏற்பதற்கு முன் 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் இருந்தன.

தற்போது 19 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தலைமை மருத்துவமனைகளுக்கு இணையான வசதி கொண்ட 6 மருத்துவமனைகள் என 25 மருத்துவமனைகளுக்கும் ரூ.1,018 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் எல்லா கட்டடப் பணிகளும் முடிவுற்று ஒவ்வொன்றாக திறந்த வைக்கப்படவுள்ளன.

யாராக இருந்தாலும் சிகிச்சை:

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 45 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது. எங்கே விபத்து நடந்தாலும் உடனடியாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் முழு வீச்சோடு சிகிச்சை அளிப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)

எந்த நாடு, மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழ்நாட்டில் விபத்தில் சிக்கினால், 702 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு ஒரு லட்ச ரூபாயை முதல் 48 மணி நேரத்தில் அரசு தருகிறது. அது தற்போது 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளன. 'இன்னுயிர் காப்போம்' திட்டம் தொடங்கப்பட்ட பின்னர் இதுவரை 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிர் காப்பாற்றப்பட்டு, ரூ.283 கோடி நிதி இதற்காக செலவிடப்பட்டுள்ளது.

GBS நோய்:

மகாராஷ்டிராவில் இருக்கக் கூடிய ஜிபிஎஸ் நோய் பாதிப்பு தமிழ்நாட்டில் வருவதற்கு வாய்ப்பில்லை. வந்தாலும் அதை எதிர் கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் மருத்துவத்துறை மேற்கொள்ளும். 2,553 மருத்துவப் பணியிடங்களுக்கு ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 15க்குள் முதலமைச்சரின் மூலம் பணி ஆணைகள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற இருக்கிறது.

பெண்ணுக்கு வீங்கிய நோய்க்கான தடுப்பூசியைத் தேசிய தடுப்பூசி பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரை நேரில் பார்க்கின்றபோது வலியுறுத்தப்படும். அவரை பார்க்க நேரம் கேட்டுள்ளோம். டெல்லி தேர்தல் பிப்ரவரி ஐந்து முடிந்தவுடன் பார்க்கலாம் எனக் கூறியுள்ளார். அவரை சந்திக்கும் போது ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள 18 கோரிக்கை பட்டியல்களோடு இதுகுறித்தும் விவாதிக்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.