ETV Bharat / state

11 ஆண்டுகள் தலைமறைவு.. சென்னையில் சிக்கிய நபர்.. அழைத்து செல்ல வரும் கேரளா போலீஸ்! - WANTED CRIMINAL ARRESTED IN AIRPORT

கேரள போலீசால் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவரை அழைத்து செல்ல கேரள போலீசார் சென்னைக்கு வருகின்றனர்.

கைதான அப்துல் பஷீர், சென்னை ஏர்போர்ட் கடிதம்
கைதான அப்துல் பஷீர், சென்னை ஏர்போர்ட் கடிதம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2025, 2:13 PM IST

சென்னை: கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள திருரங்கடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பஷீர் (53). இவர் மீது திருரங்கடி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டு நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகின. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால், அப்துல் பஷீர் போலீசில் சிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

லுக் அவுட்

இந்த நிலையில், வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த அப்துல் பஷீரை கைது செய்ய கேரள மாநிலம் மலப்புரம் காவல்துறை கடந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மலப்புரம் காவல் ஆணையர் அப்துல் பஷீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது எல்ஓசி (Look out circular) போடப்பட்டது.

இந்த நிலையில், சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜன.29) நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து பயணிகளை வெளியே அனுப்பி கொண்டு இருந்தனர்.

இதையும் படிங்க: சிரித்தபடி மன்னிப்பு கேட்ட மாணவி... துரத்தி சென்று முத்தம் கொடுத்த இளைஞர்... கோவையில் பரபரப்பு!

அப்போது அந்த விமானத்தில் கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்துல் பஷீரும் சார்ஜாவில் இருந்து சென்னை வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட் ஆவணங்களை பரிசோதித்த போது இவர் 11 ஆண்டுகளாக கேரள மாநில போலீசாரால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது.

இதையடுத்து அப்துல் பஷீரை வெளியே விடாமல் பிடித்து ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கேரள மாநிலம் மலப்புரம் காவல் ஆணையருக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்பு சென்னை விமான நிலைய போலீசில் அப்துல் பஷீரை குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும், விமான நிலைய போலீசார் அவரை காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையே 11 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை கைது செய்து கேரளாவுக்கு அழைத்து செல்வதற்காக மலப்புரம் போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.