ETV Bharat / state

பள்ளி வகுப்பறைக்குள் மலத்தை வீசிய மர்ம நபர்கள்; பல்லடத்தில் அரங்கேறிய கொடூரம்! - TIRUPUR GOVERNMENT SCHOOL

திருப்பூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறையில் மர்ம நபர்கள் மனித மலத்தை வீசியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி, சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்
பள்ளி, சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 29, 2025, 3:00 PM IST

திருப்பூர்: பள்ளி வகுப்பறைக்குள் மர்ம நபர்கள் மனித மலத்தால் அசுத்தப்படுத்திய சம்பவம் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இன்று (ஜன.29) காலை வகுப்பறைகளை ஆசிரியர்கள் திறந்து உள்ளனர்.

இதையும் படிங்க: நீதிபதி மீது காலணி வீசிய ரவுடி கருக்கா வினோத்? - என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!

அப்போது பத்தாம் வகுப்பு வகுப்பறையில் சுவர் மற்றும் பள்ளி மாணவர்கள் அமரும் இருக்கைகள் முழுவதும் மனித மலம் வீசப்பட்டிருந்தது கண்டு ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தலைமை ஆசிரியர் உடனடியாக காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வகுப்பறை முழுவதும் வீசப்பட்டுள்ள மனித மலத்தை சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டனர். மலத்தை வீசியது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, பள்ளியில் பயிலும் மாணவர்களே இச்செயலில் ஈடுபட்டார்களா? அல்லது மர்ம நபர்கள் இச்செயலில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.