திருவாரூரில் கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்த்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சண்முகம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விஜயகுமார், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
அப்போது பேசிய கரோனா தடுப்பு மண்டல கண்காணிப்பு அலுவலர் சண்முகம், “சென்னை மற்றும் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்த 303 பேருக்கு பேர் சொந்த ஊரான திருவாரூர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் கண்காணிப்பு பிரிவில் சென்னையிலிருந்து சொந்த ஊர் திரும்பி 57 பேர் தனிமைப்படுத்தப்பட்ட தீவிர மருத்துவ கண்காணிப்பு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இதுவரை 144 தடை உத்தரவில் எந்தவித தளர்வுகளும் அமல்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...சென்னையில் தீவிரம் காட்டும் கரோனா: ஐடி, தொழில் நிறுவனங்கள், கட்டுமானம், கடைகள் திறப்பது குறித்த நிபந்தனை என்ன?