திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஒன்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள பேராசிரியர்களை உறுப்பு கல்லூரியில் பணி மாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் இங்கு பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் வெளியேற்றப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரத்தநாடு அரசு கலை கல்லூரியில் தற்காலிகமாக 118 பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வும் சமீபத்தில் அரங்கேறியது.
இந்தச் செயல் தங்களை அச்சுறுத்துவதாகக் கூறிய பேராசிரியர்கள், இதை கண்டித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட காலமாக இங்கு பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிரந்தரம், பணி பாதுகாப்பை தமிழ்நாடு அரசு வழங்ககோரி கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தாக்கம்: பங்குச்சந்தை மீண்டும் சரிவு