திருவாரூர்: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், வலங்கைமான், ஆண்டிபந்தல், பேரளம், கொல்லுமாங்குடி திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று(அக்.11)மாலை முதலே வானம் கரு மேகத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில், தற்போது கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த திடீர் மழையால் சம்பா சாகுபடிக்கு தயாராகி வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள போதிலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ராகுல் காந்தி வா.. தலைமை ஏற்க வா.. சித்த ராமையா அழைப்பு!