ETV Bharat / state

அரசு வேலை வாங்கித்தருவதாக தம்பதி பண மோசடி! - govt jop financial fraud petition

திருவாரூர்: அரசு வேலை வாங்கித்தருவதாக ஏமாற்றிய தம்பதி மீது 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாக தம்பதி மோசடி
அரசு வேலை வாங்கித் தருவதாக தம்பதி மோசடி
author img

By

Published : Aug 25, 2020, 8:28 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிவண்ணன், சரளா தம்பதி. இவர்கள் அப்பகுதி மக்களிடம் சென்னை மாநகராட்சியில் அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.80 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளனர்.

இந்நிலையில், அதிக நாட்கள் ஆகியும் வேலை கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் மணிவண்ணன், சரளாவிடம் தங்களது பணத்தைக் கேட்டதற்கு, கொலை செய்து விடுவதாக தம்பதியினர் மிரட்டியுள்ளனர்.

ஏற்கனவே கணவன், மனைவியும் சேர்ந்து பரவக்கோட்டை கிராமத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்துள்ளனர். எனவே தம்பதியால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் புகார் மனு அளித்தனர்.

இதையும் படிங்க: ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி வரை மோசடி...பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.