திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் தமிழ்நாடு அரசு கிராமப்புற பெண்களின் அன்றாடச் செலவுகளை சந்திக்க உதவும் வகையிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புழக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற பெண்களுக்கு நாட்டு கோழிகளை வழங்கிவருகிறது.
அதன் ஒரு பகுதியாக நன்னிலம் கால்நடை மருத்துவமனையில் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலமாக 100 பயனாளிகளுக்கு தலா 25 நாட்டு கோழி குஞ்சுகள் கூண்டுகளுடன் இலவசமாக வழங்கப்பட்டன.
இத்திட்டம் கிராமப்புற பெண்களின் வருவாயை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட மண்டல இணை இயக்குனர் தனபாலன், நன்னிலம் உதவி இயக்குனர் ஈஸ்வரன், நன்னிலம் அதிமுக நகர செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: சேவை குறைபாடுடன் செயல்பட்ட வசந்த் & கோ நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அபராதம்