திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள பெருகவாழ்ந்தான் அரசினர் மேல்நிலை நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. கடந்த 8 மாதத்திற்கு முன்பு வீசிய கஜா புயலால் அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி முழுவதும் சேதமடைந்தது. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குடிதண்ணீர், கழிவறைகளுக்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்த பள்ளிக்கூடத்திற்கு அரசு சார்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரும் பட்டிமன்ற பேச்சாளருமான பெருவை சந்தோஷ் என்பவர் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவக்குமார் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அதனடிப்படையில் உடனடியாக அந்த பள்ளிக்கூடத்திற்கு ரூ.7 லட்சம் நிதி உதவியை சிவக்குமார் செய்துள்ளார்.
இந்த நிதியில் தேவையான தண்ணீர் வசதிக்கு போர்வெல் போடுவது, வகுப்பறை கட்டடங்களுக்கு மேற்கூறை அமைத்தல், 1500 சதரஅடியில் விழா மேடை அமைத்தல், கட்டிடங்களின் மேற்கூரையில் காரை பெயர்ந்துள்ளதை புதுப்பித்தல், பழுதடைந்த ஜன்னல்கள், கதவுகள், மின் சாதனம் வசதி உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், பள்ளியின் முன்னாள் மாணவர் சந்தோஷ்க்கும், தொழிலதிபர் சிவக்குமாருக்கும் பள்ளி மாணவர்களும், கிராம மக்களும் நன்றியை தெரிவித்துள்ளனர்.