ETV Bharat / state

மேட்டூர் நீர் திறப்பு - பிப்ரவரி 15 வரை நீட்டிக்க வேண்டுகோள் - Mettur Water Opening Request to extend till 15th February

நெல் கொள்முதலை தீவிரப்படுத்த உயர் அதிகாரிகள் குழுவை டெல்டாவிறக்கு அனுப்ப வேண்டும் என முதலமைச்சருக்கு தமிழக காவேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிப்ரவரி 15வரை மேட்டூர் அணை திறப்பை நீட்டிக்க வேண்டும் : முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

author img

By

Published : Jan 26, 2022, 7:14 AM IST

திருவாரூர்: முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டு மறு சாகுபடி செய்த விளை நிலப்பகுதிகளை தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பிஆர் பாண்டியன் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பருவம் மாறி பெய்த பெருமழையால் பல்வேறு இடங்களில் பேரழிவை சந்திக்க வேண்டி வந்தது. பல கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்து அழிந்தவர்கள் நிவாரணம் கேட்டு வருகின்றனர்.

நீர் தேவை

தமிழ்நாடு முதலமைச்சர் அழிந்துபோன சம்பா, தாளடி பயிர்களை மறு உற்பத்தி செய்வதற்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்ததை நம்பி விவசாயிகள் மறு சாகுபடி பணியை மேற்கொண்டுள்ளனர். அவ்வாறு காலம் கடந்து மறுசாகுபடி மேற்கொண்ட விவசாயிகளுக்கு இளம் பயிரை பாதுகாக்க பிப்ரவரி இறுதிவரை மேட்டூர் நீர் தேவை உள்ளது.

பிப்ரவரி 15வரை மேட்டூர் அணை திறப்பை நீட்டிக்க வேண்டும் : முதலமைச்சருக்கு பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

குறிப்பாக திருவாரூர்,நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடைமடை பகுதிகளில் சுமார் 2 லட்சம் ஏக்கரில் காலங்கடந்து மறு விவசாயப் பணிகள் நடைபெற்றுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 28 ல் மேட்டூர் அணை மூடுவதை கைவிட்டு பிப்ரவரி 15 வரை திறப்பினை கால நீட்டிப்பு செய்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

பின்னடைவு

மேலும் தேவையான பகுதிகளுக்கு தண்ணீரைப் பங்கிட்டுக் கொடுக்க நடைபெற்று வருகிறது,இணையவழியில் டோக்கன் பதிவு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்பட்ட குழப்பத்தால் கொள்முதல் பின்னடைவை சந்தித்துள்ளது.

இதனைத் துரிதப்படுத்தி விவசாயிகள் பயனடைய உயர்மட்ட அலுவலர்கள் குழுவை காவிரி டெல்டாவிற்கு அனுப்பி வைக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

கொள்முதல்

முன்னதாக மாங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உடனடி டோக்கன் வழங்கப்பட்டு,கிராம நிர்வாக அலுவலர் ஒப்புதல் பெற்று கொள்முதல் பணி இன்று முதல் துவங்கியுள்ளது. அதனை நேரில் பார்வையிட்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.இதனைப் பின்பற்றி டெல்டா முழுமையிலும் கொள்முதலை ஊக்கப்படுத்த வேண்டும்” என பி.ஆர்.பாண்டியன் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:பெரம்பலூர் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.