திருவாரூர்: தமிழ்நாட்டில் பருவமழை வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதில் குறிப்பாக நன்னிலம், சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
குறிப்பாக நன்னிலம், பேரளம், கொல்லுமாங்குடி, திருக்கொட்டாரம், மாத்தூர், கமுதக்குடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் நெற்பயிர்கள் முழுவதும் மழை நீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே வடகிழக்குப் பருவமழை காரணமாகப் பெய்துவந்த கனமழையால் மழைநீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்கள் மறு நடவுசெய்து மீண்டும் அறுவடை செய்யும் நேரத்தில் திடீர் கனமழையால் மீண்டும் நெற்பயிர் முழுவதும் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆறுகள் இணைப்பால் தமிழ்நாட்டிற்குப் பயனில்லை - நீர்ப்பாசன வல்லுநர்