ETV Bharat / state

சம்பா பயிரை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ - நிவாரணம் கேட்கும் விவசாயிகள்

திருவாரூர்: கடந்த சம்பா பருவத்தின்போது ஆனைக்கொம்பன் ஈ தாக்கி பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களுக்கு கணக்கெடுப்பின்படி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

thiruvarur
thiruvarur
author img

By

Published : Jun 9, 2020, 4:08 AM IST

தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், கடந்த ஆண்டு சம்பா பருவத்தின்போது, ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் காரணமாக விவசாயிகளுக்கு மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வேளாண்மைத் துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக்குழு ஒன்று திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு குறித்த ஆய்வு செய்தது.

அதன்படி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை உள்ளிட்ட பிற பகுதிகளிலும் பரவலாக இந்தக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். அதன்படி 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் தென்பட்டதாக அரசுக்கு பட்டியல் அனுப்பியுள்ளனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக தொடர்ச்சியாக வேளாண்மைத் துறையின் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதால், அரசு ஏற்கனவே அறிவித்தபடி கணக்கெடுப்பு செய்தவுடன் நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை.

தற்போது, குறுவை சாகுபடி தொடங்கவுள்ள நிலையில் இந்த நிவாரணத் தொகையை வழங்கினால் சாகுபடி செய்வதற்கு உதவிகரமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள், "கடந்தாண்டு ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் சம்பா பயிர்கள் பெரும்பாலும் பசுமை நிறத்திலேயே இருந்தது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பயிர்களின் பாதிப்புஆய்வு செய்யப்பட்டு முடிந்துவிட்ட நிலையில், அரசு தரப்பில் விலை நிலங்களுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கினால் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். வருகின்ற ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்க விவசாயிகள் தயாராக உள்ளோம்" என மன வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சுகாதாரத்துறை அமைச்சரைக் கண்டித்து செய்தி வாசிப்பாளர் சங்கம் கண்டன கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.