ETV Bharat / state

காணாமல் போன பாசன வாய்க்கால்: விவசாயிகள் வேதனை - farmer needs

நன்னிலம் அருகே பாசன வாய்க்கால் கடந்த 20 ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால், தற்போது வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

thiruvarur news  thiruvarur latest news  thiruvarur nannilam farmers asking for digging drainage  digging drainage  திருவாரூர் செய்திகள்  திருவாரூர் மாவட்ட செய்திகள்  திருவாரூர் நன்னிலத்தில் வாய்காளை தூர்வாரக்கோரி விவசாயிகள் வேண்டுகோள்  வாய்காளை தூர்வாரக்கோரி விவசாயிகள் வேண்டுகோள்  நன்னிலத்தில் வாய்காளை தூர்வாரக்கோரி விவசாயிகள் வேண்டுகோள்  விவசாயிகள் கோரிக்கை  விவசாயி  farmer needs  farmers
காணாமல் போன பாசன வாய்க்கால்
author img

By

Published : Jun 27, 2021, 12:19 PM IST

திருவாரூர்: நன்னிலம் அருகே உள்ள கொல்லுமாங்குடியிலிருந்து காரைக்கால் நோக்கி ஓடும் நாட்டாற்றிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய குரூஸ்தானம் பாசன வாய்க்கால், கடந்த 20 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது.

இதனால் தற்போது வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

வாய்க்காலைத் தூர்வாரக்கோரி விவசாயிகள் வேண்டுகோள்

இது குறித்துப் பேசிய விவசாயிகள்

'கடந்த 20 ஆண்டுகளாக குரூஸ்தானம் வாய்க்கால் தூர்வாரப்படாததால், இவ்வாய்க்காலை நம்பியுள்ள பண்டாரவடை, வல்லங்கிளி, பாவட்டக்குடி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறாமல் தவித்து வருகின்றன.

தற்போது இந்த பாசன வாய்க்கால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டதால், இது குறித்துப் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளோம்.

ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்காமல் பொதுப்பணித்துறை அலுவலர்கள் அலட்சியம் காட்டி வந்ததால் வாய்க்கால் மறைந்து போகும் நிலையில் உள்ளது.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, உடனடியாக இயந்திரம் கொண்டு வாய்க்காலைத் தூர்வாரி கொடுக்க வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: அடுத்தடுத்து குண்டு வெடிப்பு.. ஜம்முவில் பதற்றம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.