ETV Bharat / state

நெல் கொள்முதலில் பாகுபாடு காட்டப்படுகிறது - விவசாயிகள் குற்றச்சாட்டு - Complaint against the employee of the Paddy Procurement Station

வெளிமாநில நெல் மூட்டைகளுக்குத் தரும் முக்கியத்துவத்தை உள்ளூர் விவசாயிகளின் நெல் மூட்டைகளுக்கு தருவதில்லை என்று விவசாயிகள், நெல் கொள்முதல் நிலைய ஊழியர், அவரது மனைவி (திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்) மற்றும் அத்துறை அலுவலர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயிகள் குற்றச்சாட்டு
author img

By

Published : Jan 25, 2022, 6:58 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, காவிரி டெல்டா பாசன மாவட்டத்தின் கடைமடைப் பகுதி விவசாயத்தைச் சார்ந்துள்ளது.

இங்கு சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை பருவ நெல் சாகுபடியும், சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள்

இப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துவருகிறது.

இதற்காக ஆண்டுதோறும், மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக அரசு 450-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து உள்ளது.

அரசு விவசாயிகளுக்காகத் திறந்துவைத்துள்ள, இது போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கொள்முதல் நிலைய ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் வருவாய்த்துறை உயர் அலுவலர்களின் துணையோடு நெல் வியாபாரிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகளை ஏமாற்றும் அலுவலர்கள்

அந்த வகையில் வெளிமாநில நெல் வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் கொள்முதல் நிலைய ஊழியர்கள், தங்களது வீடுகள் மற்றும் தங்களுக்கு ஆதரவான இடங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகளைப் பதுக்கி வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, அதனை இரவோடு இரவாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சாக்குகளில் மாற்றி கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்து இருப்பு வைக்கின்றனர்.

விவசாயிகள் குற்றச்சாட்டு

மேலும், இத்தகைய வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ததை, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ததாக போலியாகக் கணக்குக் காட்டி, நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட கொள்முதல் நிலைய ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஊழல் செய்து வருகின்றனர்.

நீடாமங்கலத்தில் விவசாயிகள் வேதனை

குறிப்பாக நீடாமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் கொள்முதல் நிலைய ஊழியரும், அவரது மனைவியும் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பெண்ணும் கூட்டு முயற்சியில் அவர்களது வீட்டில், தினசரி வெளிமாநில வியாபாரிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகளைப் பதுக்குவதாகத் தெரிகிறது.

அதன் பின்னர், அவை அருகிலுள்ள தேவங்குடி மற்றும் அரிச்சபுரம் உள்ளிட்டப் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை அப்பகுதி விவசாயிகள் ஆதாரங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.

பரிதவிக்கும் விவசாயிகள்

நெல் கொள்முதல் நிலையத்தில் இத்தகைய ஊழல் முறைகேடுகள் விவசாயிகளின் பெயரிலேயே நடப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஊழல் முறைகேடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகள், கொள்முதல் நிலையத்தின் இத்தகைய தவறான செயல்பாடுகளால் மறுபுறத்தில் பயிர்க்காப்பீடு திட்டத்திலும் பெரும் இழப்பினை சந்திக்கவேண்டிய பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதனால் விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல்லை விற்கமுடியாமல் பரிதவித்து வருவதாகவும் தெரிகிறது.

பயிர்க் காப்பீடுத் திட்டம்

அதாவது நெல் சாகுபடியின்போது புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் மகசூல் பாதிக்கும்போது, விவசாயிகள் பாதிக்காத வகையில் மத்திய, மாநில அரசுகள் பயிர்க் காப்பீடுத் திட்டத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி வருகிறது.

ஆனால், பயிர்க்காப்பீடுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்போது காப்பீடு நிறுவனம், சம்மந்தப்பட்ட விவசாயிகளது வருவாய் கிராமத்தில் மொத்த சாகுபடி பரப்பு, அங்குக் கிடைக்கும் மகசூலை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்குகிறது.

தொடர் ஏமாற்றத்தில் விவசாயிகள்

ஆனால், இயற்கை இடர்பாடுகளால் குறிப்பிட்ட வருவாய் கிராமத்தில் மகசூல் பாதிக்கும்போது அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகளது நெல் அதிக அளவில் கொள்முதல் செய்வதில் தான் அலுவலர்கள் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தில் மகசூல் பாதிக்கப்படவில்லை என்பதற்கு இதனைச் சான்றாகக் கொண்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிட காப்பீடு நிறுவனம் சட்டப்படியாக மறுத்துவருகிறது.

அரசு உயர் அலுவலர்கள் துணையோடு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வியாபாரிகளது நெல் கொள்முதல் செய்யப்பட்டு நடைபெறும் ஊழல் நடவடிக்கைகளால் இரு வகைகளில் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

முதலமைச்சர் கவனம் தேவை

ஒருபுறம் மகசூல் அதிகம் கிடைத்தாலும் நெல்லை கொள்முதல் நிலையத்தில் விற்கமுடியாமல் நஷ்டத்தைச் சந்திக்கும் விவசாயிகள், மற்றொரு புறத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமலும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து ஊழல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இப்பகுதி விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: “இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” - ஸ்டாலின் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.