ETV Bharat / state

சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா 2020 - பி.ஆர்.பாண்டியன் வேதனை - சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா 2020

திருவாரூர்: சூழலியல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவு 2020 - மசோதாவால் காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலம் பறிபோகும் என பி.ஆர்.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Jul 28, 2020, 1:32 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்

அப்போது அவர் பேசுகையில், "இந்திய பொருளாதார வளர்ச்சியை காரணம் காட்டி கச்சா, நிலவாயு, நிலக்கரி சுரங்கம், தொழிற்சாலைகள், பெரும் சாலைகள் அமைப்பு போன்ற தொழில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில், விவசாயம், இயற்கை வளங்கள் அழிந்துவிடக் கூடாது. காற்று மாசு, பருவ கால மாற்றங்கள் மூலம் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு பேரழிவு ஏற்படுத்திவிடக் கூடாது. இயற்கை வளங்கள் அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment IMpact Assessment) என்ற சட்டம் 1994ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருந்தது.

இச்சட்டம் மீது மாற்றம் செய்யப்பட்டு தற்போதையை தேவைக்கேற்ப உரிய வழி காட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு பாதிப்பு இல்லாத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்படும். மேலும் சில திட்டங்களால் பேரழிவு ஏற்படும் என அறியப்படும்பட்சத்தில் அனுமதி மறுக்கப்படும். இதற்கான வகையில் சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது.

தற்போது மாற்றம் செய்யப்படும் சூழலியல் தாக்க மதிப்பீடு சட்டம் 2020 உலக பெரு நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களின் கருத்துரிமையை பறிக்கும் வகையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாகவும் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு எடுப்பது போன்ற பேரழிவு திட்டங்களை மக்கள் கருத்தறியாமல் மத்திய அரசு அனுமதி வழங்க முடியும்.

நீதிமன்றங்களின் தலையீடுகளை தடுத்து நிறுத்திடவும், மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்படாமலேயே எந்தவொரு திட்டத்தையும் ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் செயல்படுத்தக் கூடிய வகையில் மாறுதல்கள் செய்யப்பட்டு புதிய சட்ட வரைவு மசோதா கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்டது.

2006ஆம் ஆண்டு சட்ட மசோதா மூலம் சூழலியல் தாக்க மதிப்பீட்டின்படி, இரண்டு அமைப்புகள் மூலம் அனுமதி பெற வேண்டும். அதன்படி மத்திய, மாநில அரசுகளால் இரு தொழில்நுட்ப உயர்மட்டக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களின் ஒப்புதல் பெற்று மத்திய, மாநில அரசுகளின் இரு சுற்றுச்சூழல் அமைப்புகளிடமும் சுற்றுச்சூழல் தடையில்லா அனுமதி பெற வேண்டும்.

ஆனால், 2020 வரைவு மசோதா மூலம் ஒப்பந்தம் பெறும் நிறுவனமே வல்லுநர் குழு அமைத்துக் கொண்டு "குறிப்பிட்ட திட்டம் குறித்த சூழலியல் (E IA) தாக்க அறிக்கை தயாரிப்புகளின் ஆய்வுகள் நடத்தப்படும். அதன் அறிக்கையின் படி சுற்றுச்சூழல் தடையின்மை அனுமதி வழங்க வேண்டும். அவசரம் எனும் பட்சத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி மத்திய அரசே அனுமதி கொடுத்துவிடுவது".

வறண்ட புல்வெளிக் காடுகள், இந்தப் புதிய சட்ட வரைவினால் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு உலகப்பெரும் தொழில் நிறுவனங்களுக்கு தாராளமாக தாரைவார்க்கப்படும். இதுபோன்ற சுற்றுச் சூழலியலுக்கு எதிரான அம்சங்கள் இருப்பதால் பேரழிவு ஏற்பட வழிவகுக்கும் என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைத்து சூழலியல் தாக்க மதிப்பீடு மசோதா 2020ஐ கைவிட சூழலியல் வல்லுநர்களால் வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி எரிவாயு குழாய் பதிப்பதற்கும், சாலைகள் அமைப்பதற்கும், கச்சா, எரிவாயு எடுப்பதற்கான அனுமதியை நேரடியாக மத்திய அரசே அனுமதி வழங்கும் சட்ட திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி 2017இல் தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் கொடுத்த கடிதத்தை தொடர்ந்து மசோதா கொண்டு வரப்படுகிறதோ? என அஞ்ச தோன்றுகிறது. இம்மசோதா சட்டமாக்கப்படும் பட்சத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிப்பு செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை பறிக்கப்படும் பேராபத்தும் ஏற்படும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.