அனைத்து துறைகளும் தனியார்மயமாக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சுமத்திவருகின்றனர். இந்நிலையில், மின் விநியோகத்தில் தனியார்மயத்தை புகுத்திடும் விதமாக யூனியன் பிரதேசங்களில் தனியார்மயத்தை அறிமுகம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைஅனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மின் வாரியம் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மின்சார செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடியுடன் பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.