ETV Bharat / state

'விவசாயிகளுக்கு 15 மணி நேரம் மின்சாரம் வழங்கத் தயார்' - அமைச்சர் காமராஜ் - விவசாயிகளுக்கு 15 மணி நேரம் மின்சார சேவை - அமைச்சர் காமராஜ்

திருவாரூர்: விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரத்தை 15 மணி நேரம் வரை, வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

kamaraj
kamaraj
author img

By

Published : Jun 19, 2020, 7:32 PM IST

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் நடைபெற்று வரும் துணை மின் நிலைய பணிகளை தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "2011ஆம் ஆண்டுக்கு முன்னர் மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு மின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் மொத்த மின்சாரத் தேவை 16 ஆயிரத்து 151 மெகாவாட் என்ற நிலையில் தற்போது 18ஆயிரத்து 656 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழ்நாடு மின் உற்பத்தியில் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. இதனால், தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை.

விவசாயிகளின் தேவைக்கேற்ற இடங்களில் மும்முனை மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 மணி நேரம் மின்சாரத் தேவை என்பது 15 மணி நேரம் வரை வழங்கவும் அரசு தயாராக உள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் மொத்த மின் தேவை 225- மெகா வாட் என்ற நிலையில் நீடாமங்கலம், எடைமேலயூர் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார்.

மின்சாரப் பணியை ஆய்வு செய்யும் அமைச்சர்

''அதேபோன்று மாவட்டத்தின் ஒன்பது இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன" என அமைச்சர் காமராஜ் கூறினார்.

இதையும் படிங்க: இரண்டு முறை கோவிட்-19 கண்டறிதல் சோதனை நடத்த வேண்டும் - பூங்கோதை எம்.எல்.ஏ கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.