ETV Bharat / state

'ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத்தேர்வு' - செங்கோட்டையன்! - செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

திருவாரூர் : ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களுடைய கருத்து, கல்வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Oct 21, 2019, 2:08 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருகவாழ்ந்தான் என்னும் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில், கலந்துகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

'இந்தியா முழுவதும் மத்திய அரசு, அனைவருக்கும் கல்வி என்கிற திட்டத்தின் கீழ் ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை அமல்படுத்தியுள்ளது. பல மாநிலங்கள் அதனைப் பின்பற்றி, இந்த ஆண்டே பொதுத் தேர்வினைக் கொண்டு வந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு 3 ஆண்டுகள் காலத்திற்கு தமிழ்நாட்டில் விதிவிலக்கு அளித்துள்ளார். மூன்று ஆண்டு காலத்திற்குப் பிறகு மக்களுடைய கருத்து, கல்வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் பொதுத்தேர்வுகள் செயல்படுத்தப்படும்.

11, 12ஆம் வகுப்புகளுக்கு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் மட்டும்தான் அரசு கேள்வித்தாள் வழங்கப்படும் . தனியார் பள்ளி பாடத்திட்டம் வேறு, அரசு பாடத்திட்டம் வேறு.

புதிதாக அரசு சார்பில் உருவாக்கியுள்ள கல்வி பாடத்திட்டம் இந்தியாவில் முன்மாதிாியாக உருவாக்கப்பட்டுள்ளது. 12ஆண்டுகாலத்திற்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்களின் எதிர் காலம் இன்னும் ஒரு ஆண்டுகாலத்திற்குப் பிறகு பிரகாசமாக மாறுவதற்கு கல்வி மாற்றங்கள் செய்யபட்டுள்ளது" என தொிவித்தார்.

இதையும் படிங்க : முதலமைச்சர் பழனிசாமியை புகழ்ந்து தள்ளிய அமைச்சர்!

Intro:Body:5 மற்றும் 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டு காலத்திற்கு பிறகு மக்களுடைய கருத்து மற்றும், கல்வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என மன்னார்குடியில் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி .

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்பு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

5 மற்றும் 8 ம் வகுப்பு பொது தேர்வு என்பது இந்தியா முழுவதும் மத்திய அரசு அனைவருக்கும் கல்வி என்கிற திட்டத்தின்கீழ் அமல்படுத்தியுள்ளது . பல மாநிலங்கள் அதனை பின்பற்றி இந்த ஆண்டே பொதுத்தேர்வினை கொண்டவந்துள்ளது. தமிழக முதலமைச்சர் கருணை உள்ளத்தோடு 3ஆண்டுகாளத்திற்கு தமிழகத்தில் விதிவிலக்கு அளித்துள்ளார்.

மூன்று ஆண்டுகாலத்திற்கு பிறகு மக்களுடைய கருத்து மற்றும், கல்வியாளர்களின் கருத்தின் அடிப்படையில் பொதுதேர்வு செயல்படுத்தப்படும். 11 , 12-ஆம் வகுப்பு கணினி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்தவுடன் விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறுகின்ற பள்ளிகளில் மட்டும்தான் அரசு கேள்ளிதாள் வழங்கப்படும் . தனியார் பள்ளி பாடத்திட்டம் வேறு அரசு பாடத்திட்டம் வேறு . புதிதாக அரசு சார்பில் உருவாக்கியுள்ள சமச்சீர் கல்வி திட்டம் இந்தியாவில் முன்மாதிாியாக உருவாக்கபட்டுள்ளது . 12 ஆண்டுகாலத்திற்கு பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது . மாணவர்களின் எதிர் காலம் இன்னும் 1 ஆண்டுகாலத்திற்கு பிறகு பிரகாசமான எதிர்காலமாக மாறுவதற்கு கல்வி மாற்றங்கள் செய்யபட்டுள்ளது, என தொிவித்தார் . Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.